எங்களைப் பற்றி
தமிழ்க்குடிகள்,
தமிழருக்கான தளம்.
நமது பெருமைமிகு தாய்மொழியாகிய தமிழையும், தமிழ் சார்ந்த நன்னெறி வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றின் மீதான ஈடுபாடு ஏற்படும் வண்ணம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கவும், உலகின் எந்தப் பகுதியில் இருந்த போதிலும் ஒற்றுமையுள்ள அதேசமயம் மண்மணம் மாறாத வாழ்வியல் கொண்ட ஓர் குடியாக தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழவும், மொழியும் பாரம்பரியமும் கால மாற்றத்திற்கேற்ப வளர்ச்சி பெறத் தேவையான பல்வேறு முன்னெடுப்புகளை நாம் திட்டமிட்டு மேற்கொள்கிறோம்!
தலைமுறைகள் கடந்தாலும் மொழியும் குடியும் செழித்து வாழவே நாம் அக மகிழ்வுடன் கடமையாற்றுகிறோம்!
ஒரு தனிநபர் முன்னெடுப்பாகத் துவங்கி, தமிழ்ப் பற்றுள்ள பலர் இணைந்து ஒரு பொதுநல நிறுவனமாக பதிவு பெற்று பல நல்ல முன்னெடுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.
தவபாலன் வாமதேவன் - நிறுவனர்
Champion School at a Glance
குறிக்கோள்
மாறிவரும் உலகச்சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் அதே நேரத்தில், வருங்காலத் தலைமுறையினர் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் தளங்களில் தேர்ந்த பயிற்சி பெற்று, உடல், உள்ளம் மற்றும் ஆன்ம அளவில் முழு வளர்ச்சி பெற்றிட உதவுவதும், அந்த உயர்ந்த எண்ணத்தின் பொருட்டு ஒத்த சிந்தனையுள்ள தன்னார்வலர்களைத் திரட்டி உலகத்தரத்தில் திறன் மேம்பாடுப் பயிற்சியளிக்கும் பொதுநல அமைப்பாக இயங்குவதுமே தமிழ்க்குடிகள் அமைப்பின் மேலான குறிக்கோளாகும்.
நோக்கம்:
தமிழ் மொழி, தமிழர் வரலாறு, வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளை அடுத்த தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளுக்குக் கடத்தி, அறமும் திறமும் கொண்ட சிறந்த பேராளுமைகளாக்க வேண்டி கால, நேர, தூர, தேச எல்லைகளைக் கடந்து செயல்படும் மனிதவள மேம்பாட்டுக் களமாக இயங்குவதே தமிழ்க்குடிகள் அமைப்பின் உயரிய நோக்கமாகும்.
